செய்திகள் மலேசியா
Hat Yai-க்குச் செல்லும் MySawasdee Penang Edition ரயில் சேவையின் முதற்கட்ட சோதனை டிசம்பர் 29-ஆம் தேதி அறிமுகமாகின்றது
கோலாலம்பூர்:
MySawasdee Penang Edition திட்டத்தின் கீழ் பட்டர்வர்த் - Hat Yai இடையிலான சிறப்பு ரயில் சேவையின் முதற்கட்ட சோதனை சேவை டிசம்பர் 29-ஆம் முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கேடிஎம்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் மத்திய ரயில்வே கீழ் உள்ள முக்கிய இடங்களுக்கு இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
சிறப்பு ரயில் சேவைக்கான பயனர்களின் தேவை, பதிலை மதிப்பிடும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேடிஎம்பி நிறுவனம் கூறியது.
ஒரு வழி பயணக் கட்டணம் 45 ரிங்கிட் ஆகும்.
இந்த ரயில் புக்கிட் மெர்தாஜாம், சுங்கை பட்டானி, அலோர் ஸ்டார், ஆராவ், பாடாங் பெசார் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
டிசம்பர் 23-ஆம் தேதி காலை 10 முதல் இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று கேடிஎம்பி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பட்டர்வொர்த்தில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் மதியம் 12.05 மணிக்கு ஹாட் யாயை வந்தடையும்
ஹட் யாயிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.46 மணிக்கு பட்டர்வொர்த்தை வந்தடையும்.
இந்தப் புதிய ரயில் சேவை வடக்கு தீபகற்ப மலேசியாவில் வசிப்பவர்களுக்கும் தாய்லாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதியான பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 9:53 pm
ரோபோடிக் கல்வி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்: ஆசிரியை ரூபிணி
December 21, 2024, 5:59 pm
ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்
December 21, 2024, 5:17 pm
செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்
December 21, 2024, 4:51 pm
2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா
December 21, 2024, 4:44 pm
பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும் பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்
December 21, 2024, 2:37 pm
மியான்மாரில் அமைதியை மீட்டெடுக்க மலேசியா துணை நிற்கும்: முஹம்மத் ஹசன்
December 21, 2024, 2:28 pm