நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்  முழு கவனம் செலுத்தும்: சுரேன் கந்தா

பெட்டாலிங் ஜெயா:

2025ல் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கவனம் செலுத்தவுள்ளது.

கல்வியுடன் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பளர்கள், சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கெடா, பினாங்கு, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் போன்ற மாநிலங்களின் தேசிய ஒருங்கிணைப்பளர்கள் இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

2024இல் ஸ்ரீ முருகன் நிலையம் தேசிய அளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

2025இல் ஸ்ரீ முருகன் நிலையத்தின் அடுத்தக் கட்ட திட்டங்களும் நடவடிக்கைகளும் மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கும்.
குறிப்பாக அடுத்தாண்டு தேசிய அளவிலான இளைஞர்களை ஒன்றிணைத்து ஸ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் படை மாபெரும் படையாக திரண்டு வெற்றி நடைபோட காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் பெண் சத்தி அணி வெற்றி புரட்சி செய்ய கங்கணம் கட்டியுள்ளது.

ஸ்ரீ முருகன் நிலையம், 2025-ஆம் ஆண்டில் தங்களின் மிகப்பெரிய ஆயுதமான பிரமாஸ்தரா சக்தி வளைத்தளத்தின் வழி அவர்களின் 42ஆண்டு கால தத்துவங்களை அனைத்து இந்திய குடும்பங்களுக்குக் கொண்டு சேர்க்கும்.

42 ஆண்டு காலமாக ஸ்ரீ முருகன் நிலையம் இந்திய மாணவர்களின் திறவுகோலாகிய கல்வியில் முக்கியத்துவம் செலுத்தியது.

ஆனால் 2025-இல் சமுதாய அக்கறையோடு பி40 இந்திய குடும்பத்தினர்களின் வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset