நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மா விவகாரத்தில் நான் தலையிடவில்லை: பிரதமர்

சுபாங் ஜெயா -

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர்  விவகாரத்தில் நான் ஒருபோதும் தலையிட்டது இல்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை திட்டவட்டமாக கூறினார்.

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் 17 பணமோசடி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து விடுவிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு நான் அறிவுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வெறுமனே நீதிபதிகளை அழைத்து அறிவுறுத்தலாம் என்று நினைப்பது அபத்தமானது.

எனது நிர்வாகம் முந்தைய நிர்வாகத்தைப் போன்றது என்று நினைப்பது நியாயமற்றது.

இதன் மூலம் பிரதமர் ஒரு நீதிபதியை அழைத்து அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

நான் எந்த நீதிபதிகளையும் சந்திக்கவில்லை. அவர்களில் யாருடனும் முடிவு குறித்து விவாதிக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

சட்டத்துறை தலைவர் அவர் முடிவை மேல்முறையீடு செய்ய விரும்பினால், அது அவரைப் பொறுத்தது என்று பிரதமர் மேலும் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset