நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரபோவோ சுபியாடோவையும், தக்சின் ஷினாவத்ராவையும்  பிரதமர் லங்காவியில் சந்திக்கிறார்

சுபாங் ஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாடோ, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு முறையே டிசம்பர் 23, 26 ஆகிய தேதிகளில் லங்காவியில் நடைபெறவுள்ளது.

பிரபோவோவுடனான நான்கு அம்ச சந்திப்பில், இருதரப்பு விவாதங்கள், 2025 ஆசியான் தலைவர் பதவியில் மலேசியாவின் பங்கு ஆகியவை அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

அதே வேளையில் அடுத்த ஆண்டு புதிய தலைவராக ஆசியானை வழிநடத்தும் அன்வாரின் தனிப்பட்ட ஆலோசகராக செயல்பசுவது குறித்து தக்சினுடனான சந்திப்பு அமையும்.

குறிப்பாக  பல ஆசியான் தலைவர்களுடன் நல்லுறவில் பலம் உள்ளதால், தக்சினின் பங்கை கவனமாக விவாதிக்க நான் அவருடன் ஒரு சந்திப்பை நடத்துகிறேன்.

இங்குள்ள ஹோட்டலில் நடைபெற்று செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset