நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இன ரீதியிலான சர்ச்சையாக மாற்ற வேண்டாம்: டத்தோஸ்ரீ அன்வார்

சுபாங் ஜெயா:

இந்திய சமுதாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இன ரீதியிலான சர்ச்சையாக மாற்ற வேண்டாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் என்பது சிறப்பு நிதியாகும்.

இதைத் தவிர்த்து பல திட்டங்களின் வாயிலாக உதவிகள் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்படுகிறது.

குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையுமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பல திட்டங்களை இந்திய சமுதாயத்திற்காக அறிவித்துள்ளார்.

இத் திட்டங்களின் வாயிலாக பல மில்லியன் ரிங்கிட்டுகளும் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து தமிழ்ப்பள்ளி மேம்பாடு உட்பட் பல திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

என்னவென்றால் ஒதுக்கப்படும் நிதிகளை எல்லாம் தனித்தனியாக அறிவிக்க முடியாது.

அதற்காக இந்திய சமுதாயத்தை மடானி அரசாங்கம் கைவிட்டுவிட்டது என்றும் யாரும் குற்றம் சொல்ல முடியாது.

காரணம் நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் நலன்களிலும் மடானி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

ஆகவே இந்திய சமுதாயத்திற்கு மடானி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை நான் வன்முறையாக கண்டிக்கிறேன்.

அதே வேளையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அது குறித்து ஒரு ஆய்வுகளை செய்து பேச வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset