நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது; கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகை ஆளப் போகிறது. கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

தாப்பா தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு டிசாரா கல்வி உதவி நிதியில் வாயிலாக இன்று உபகார நிதி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு பேரா தாப்பாவில் உள்ள யூஐடிஎம்மில் நடைபெற்றது.

இந்த கல்வி  உபகார நிதி திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும், வறிய நிலை, பி40 குடும்பத்தைச் சேர்ந்த பல இன மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வரும் காலங்களிலும் இந்த கல்வி  உபகார நிதி திட்டம் தொடரும். 

அதே வேளையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம் இனி உலகை ஆளப்போகிறது. ஆகையால் அது தொடர்பான கல்வியையும் அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுமையாக உழையுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் பெறுங்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் மாணவர்களை கேட்டு கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset