நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்த மகன் கத்தியால் குத்திய சம்பவம்: ஓய்வுப்பெற்ற ஆசிரியர் மரணம் 

கோல பிலா: 

சொந்த மகன் கத்தியால் குத்திய சம்பவத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் கோல பிலாவில் உள்ள கம்போங் செனாலிங் எனும் பகுதியில் நிகழ்ந்தது 

மரணமடைந்த நபர் 65 வயதுக்குட்டவர் என்றும் அவரைக் கொலை செய்த அவரின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் கோல பிலா காவல்துறை தலைவர் அம்ரான் முஹம்மத் கனி கூறினார் 

ஒரு கூர்மையான ஆயுதத்தால் ஓர் ஆடவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தங்கள் தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார். 

சந்தேக நபர் அவரின் முதுகின் பின்னால் குத்தியதால் இறந்ததாக காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர் சொன்னார். 

சந்தேக நபருக்கு தற்கொலை செய்யும் ஒரு வகையான பிரம்மை ஏற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கேட்ட தந்தையை அவர் தாக்கியிருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார் 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302யின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset