நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: கெடாவில் மீண்டும் வெள்ளம்

ஈப்போ:

பேரா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் கெடாவில் மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழையை தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் பேரா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 231ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு இந்த எண்ணிக்கை 136ஆக இருந்தது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை 975 பேரில் இருந்து 909ஆக குறைந்தது.

ஷாஆலம், கோக்பாக், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கெடா மாநிலத்தில் குபாங் பாசுவில் புதியதாக வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 80 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset