நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயா பல்கலைக்கழகத்தில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தேசிய தேர்வை 600 மாணவர்கள் எழுதுகின்றனர்

கோலாலம்பூர்:

மலாயா பல்கலைக்கழகத்தில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தேசிய தேர்வை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

இத் தேர்வின் ஒருங்கிணைப்பாளர்களான ஶ்ரீகணேஸ், புகனேஸ்வரி ஆகியோர் இதனை கூறினர்.

மாணவர்களை அரசாங்கத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வை நடத்துகிறது.

ஆறாம் ஆண்டு மாணவர்களை இடைநிலைப் பள்ளி தேர்வுக்குத் தயார்படுத்தும் அதே நேரத்தில் மூன்றாம் படிவ மாணவர்களை ஐந்தாம் படிவத்திற்குத் தயார்படுத்துவதே இத் தேர்வின் முக்கிய நோக்கமாகும்.

இதில், தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, தமிழ் மொழி ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.

அவ்வகையில் மலாயா பல்கலைக்கழகத்தின் தேர்வு அரங்கில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வை எழுதுகின்றனர்.

இதைத் தவிர்த்து நாடு முழுவதும் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் இந்த தேர்வை 2000த்திற்கும் மேற்பட்ட  மாணவர்கள்  எழுதுகின்றனர்.

யூபிஎஸ்ஆர், பிடி 3 போன்ற தேர்வுகள் இல்லாத நிலையில் நமது மாணவர்கள் இந்த தேசிய தேர்வை ஆர்வத்துடன் எழுதுகின்றனர்.

இது ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு கிடைத்த வெற்றி என்று ஶ்ரீகணேஸ், புகனேஸ்வரி கூறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset