நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் வழக்கு விசாரணையில் 1,000 போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்: சைபுடின்

புத்ராஜெயா:

குளோபல் இக்வான் வழக்கு தொடர்பான விசாரணையில் 1,000த்திற்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் உறுதிப்படுத்தினார்.

குளோபன் இக்வானுக்கு எதிரான உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போலிசாரின் இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் போலிஸ் விசாரணை பல்வேறு சட்ட விதிகளின் கோணங்களில் விரிவாக மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் தேவைக்கேற்ப அமைப்புடன் தொடர்புடைய நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை பெரியது, 1,000த்தை தாண்டியது.

மேலும் ஆலோசனை, உளவியல் நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 650க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு உள்ளது என்று டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset