நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானின் கோட்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பகாங் மாநில அரசு அறிவிப்பு

குவாந்தான்:

குளோபல் இக்வான் இஸ்லாம் சமய நம்பிக்கை, போதனைகளுக்கு எதிரானது என பகாங் மாநில அரசு அறிவித்துள்ளது.

பகாங் மாநில ஷரியா சட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் கடந்த புதன்கிழமை கூடிய சிறப்புக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பெர்லிஸ், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து பகாங் மாநிலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இக் கூட்டத்தில் அல்-அர்காம் அமைப்பு கொண்டு வந்த அவுராத் முஹம்மதியா மீதான நம்பிக்கை,  நடைமுறையைத் தொடர முடியாது.

பகாங் மாநில முஃப்தி பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மாடி முஹம்மது நயீம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset