நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் ஒடுக்கீட்டை 100 மில்லியனில் இருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக அரசு அதிகரிக்க வேண்டும்: பிரபாகரன்

கோலாலம்பூர்:

மித்ராவின் ஒடுக்கீட்டை 100 மில்லியனில் இருந்து 300 மில்லியன் ரிங்கிட்டாக அரசு அதிகரிக்க வேண்டும்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் மித்ராவின் கீழ் அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குகிறது.

ஆனால் இந்த நிதி போதவில்லை. அதற்கு பதிலாக நிதியை 300 மில்லியன் ரிங்கிட்டாக அரசாங்கம் உயர்த்த வேண்டும்.

கோரப்பட்ட கூடுதல் நிதி இந்திய சமூகத்தில் பி40, தீவிர ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தப்படும்.

இந்த விண்ணப்பம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் இது பட்ஜெட் 2025க்கான திட்டங்களில் ஒன்றாகும்.

ஒட்டுமொத்தமாக பல்வேறு திட்டங்களுக்கு பல ஆண்டுகளாக மித்ராவின்  கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட பாதியை பயன்படுத்தியது.

மீதமுள்ள 50 மில்லியன் ரிங்கிட் இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக இளைஞர்களிடையே மாற்றம்  வரவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆகையால் 300 மில்லியன் ரிங்கிட் அதிகரிப்பதற்கான முன்மொழிவு போன்ற பெரிய ஒதுக்கீடு இருந்தால்,

ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் இறுதியில் உதவும் பல திட்டங்களையும் முயற்சிகளையும் நாங்கள் செயல்படுத்த முடியும் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset