நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஜுக்கர்பெர்க்

நியூயார்க்: 

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். 

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார்.

 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது. 

இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஜுக்கர்பெர்க் வியாழக்கிழமையில் உயர்ந்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு முதலீடுகள்தான், மெட்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று மெட்டா பலமுறை கூறியுள்ளது. 

மேலும், செலவுக் குறைப்ப் திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டில் 21000 பணியாளர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். 

மார்க் ஜுக்கர்பெர்க்கை காட்டிலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 50 பில்லியன் டாலருடன் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset