நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வேலை நேரம் முடிந்துவிட்டது. இனி விமானத்தைச் செலுத்த முடியாது என்று கூறிய இண்டிகோ விமானியின் வீடியோ வைரல் 

பூனே:

இண்டிகோ விமானி வேலை நேரம் முடிந்ததைக் காரணங்காட்டி விமானத்தைச் செலுத்த மறுத்துள்ளார். 

இதனால் விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதமானது

அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

காணொளியில் பயணிகள் ஆத்திரப்படுவதைக் காண முடிகிறது.

இண்டிகோ விமானம் இந்தியாவின் புனே நகரிலிருந்து பெங்களூருக்குப் புறப்படவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

காணொளியைக் கண்ட விமானத்துறை நிபுணர் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு விமானிகளும் விமானச் சிப்பந்திகளும் கொடுக்கப்பட்ட வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.

விமானிகளின் உரிமம் ரத்துச் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset