நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லவ் ஜிஹாதுக்கு வெளிநாட்டு நிதி: உ.பி. நீதிமன்ற நீதிபதி சர்ச்சை கருத்து  

பரேலி: 

லவ் ஜிஹாதில் ஈடுபட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாக உத்தர பிரதேச மாவட்ட நீதிமன்ற நீதிபதி சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

ஹிந்து என கூறி தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆனந்த் குமார் என்பவர் ஏமாற்றிவிட்டதாக 22 வயது இளம் பெண் புகார் அளித்தார். அவர் உண்மையில் ஒரு முஸ்லிம் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி புகார் கூறிய பெண், தான் ஏற்கெனவே அளித்த சாட்சியம் பொய் என்றும், இந்துத்துவா அமைப்புகள் தனது பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததன் பேரில் அந்த புகார் அளிக்கப்பட்டது என கூறினார்.

ஆனால், அந்த சாட்சியத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

Love Jihad' major threat to nation's unity : UP court

குற்றவாளியின் வற்புறுத்தல் காரணமாக அந்தப் பெண் சாட்சியத்தை மாற்றி கூறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த பரேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் அளித்த தீர்ப்பில், லவ் ஜிகாத்தின் முக்கிய நோக்கம் மக்களை மதமாற்றம் செய்வது. இதன் பின்னணியில் மதவாத அமைப்புகள் உள்ளன. இதற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. 

பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்ணின் கையில் விலையுயர்ந்த ஆன்ட்ராய்டு செல்போன் உள்ளது. இந்த சட்டவிரோத மதமாற்றத்தில் சில பயங்கரவாத தனிநபர்கள் ஈடுபடுகின்றனர்.

பெயரை மாற்றிக் கூறி லவ் ஜிகாத் மோசடியில் ஈடுபட்ட ஆலிம் அகமது வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

2022-ம் ஆண்டில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டதும் நீதிபதி ரவி குமார் திவாகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset