நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய மருத்துவர்களை பணியில் அமர்த்துவதற்கான கால அவகாசத்தை சுகாதார அமைச்சு குறைக்க வேண்டும்: சிலாங்கூர் மஇகா வலியுறுத்து

புத்ராஜெயா:

கல்வி முடித்து வரும் மருத்துவர்களை பணியில் அமர்த்துவதற்கான கால அவகாசத்தை சுகாதார அமைச்சு குறைக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநில மஇகா இதனை வலியுறுத்தியதாக அதன் தலைமை செயலாளர் எம். சசிதரன் இதனை கூறினார்.

சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத்தின் அரசியல் செயலாளர் ஹாஜி முகமத் பைசாலை சிலாங்கூர் மாநில மஇகா தலைவர்கள் சந்தித்தனர்.

மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு அமைச்சு விரைந்து தீர்வுக் காணப்பட வேண்டும்.

அதே வேளையில் கல்வி முடித்து வரும் மருத்துவர்களுக்கு வேலை வழங்குவதற்கு 8 மாதங்கள் ஆகிறது.

இக்கால அவகாசம் 3 மாதங்களாக குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வதற்கு அதிகமான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

இதன் மூலம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்.

மக்கள் பயன் பெறும் வகையில் ஹைபிரிட் கிளினிக்களும் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை, கிளினிக்குகளின் பார்வையாளர் வாரிய உறுப்பினர்கள் குழுவில் மஇகாவினரின் பங்களிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

எங்களின் கோரிக்கைகளை அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வதுடன் உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என முகமத் பைசால் வாக்குறுதி வழங்கினார் என்று சசிதரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset