செய்திகள் மலேசியா
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
கோலாலம்பூர்:
லெபனானின் தெற்கு பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடைக்கால படை (UNIFIL) செயல்பாட்டு பகுதிக்குள் அமைந்துள்ள மலேசிய படைத்தளம் MALBATT 850-13 முகாமுக்கு அருகில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வான்தாக்குதல் நடத்தியதாக நேற்று அதிகாலை தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலித் நோர்டின் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2.35 மணியளவில் MALBATT 850-13 படையினரின் முகாமிலிருந்து சுமார் 100 முதல் 200 மீட்டர் தூரத்தில் உள்ள கண்காணிப்பு நிலையம் அருகே நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
அந்தத் தாக்குதல் லிடானி ஆற்றை கடக்கும் ஒரு பாலத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
“அதனைத் தொடர்ந்து அதிகாலை 3.02 மணியளவில் மேலும் ஒரு தாக்குதல் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதில் அந்த கண்காணிப்பு நிலையப் பகுதியில் உள்ள சில வசதிகள், படைவீரர்களின் தங்குமிடங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
“சம்பவம் நடந்தபோது கண்காணிப்பு நிலையத்தில் இருந்த ஒரு அதிகாரி உட்பட மற்ற எட்டு MALBATT 850-13 வீரர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கையாக MALBATT தற்காலிக செயல்பாட்டு மையம் (TOC) பின்வாங்குமாறு உத்தரவிட்டது.
“அதன்பின் அவர்கள் 12 லெபனான் ஆயுதப்படை (LAF) வீரர்களுடன் சேர்ந்து பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்து, அதிகாலை 4.12 மணிக்கு பாதுகாப்பாக அங்கு சென்றடைந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் MALBATT அல்லது LAF படைவீரர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் அவர்கள் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களும் உபகரணங்களும் பாதுகாப்பாக உள்ளன என்றார் அவர்.
அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ அதிகாரிகளால் சுகாதார பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“வெளிநாடுகளில் அமைதிப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மலேசிய ஆயுதப்படை (ATM) வீரர்களின் பாதுகாப்பு அரசின் முக்கிய முன்னுரிமையாகும் என்பதை பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்துகிறது.
“இணைந்த படைத்தளத்தின் தலைமையகம் மூலம் செயல்பாட்டு பகுதியில் நிலவும் சூழ்நிலையை அமைச்சகம் தொடர்ந்து கவனித்து வரும். மேலும் UNIFIL, பிற அமைதிப் பாதுகாப்பு படைகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
வாய்க்காலில் விழுந்து காணாமல் போன சிறுவன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
April 30, 2026, 4:41 pm
