செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
ஷா ஆலம்:
நோன்புப் பெருநாளை (ஹரி ராயா அய்டில்ஃபித்ரி) முன்னிட்டு நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் இயக்கத் தடை அமல்படுத்தப்படும். இந்தத் தடை மார்ச் 19 முதல் 20 வரை, அதாவது ஹரி ராயாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மார்ச் 28 முதல் 29 வரை, பெருநாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னரும் அமலில் இருக்கும்.
சாலைப் போக்குவரத்து துறையின் (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறுகையில், பெருநாள் காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் போதும் மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் போதும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சாலைப் போக்குவரத்து துறையின் (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.
“ஹரி ராயா பெருநாள் காலத்தில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகளில் போக்குவரத்துச் சீராக இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று அவர் இன்று தொடங்கிய ஹரி ராயா நடவடிக்கை (Ops Hari Raya Aidilfitri) அறிமுக நிகழ்வில் கூறினார். இந்த நடவடிக்கை மார்ச் 29 வரை தொடரும்.
இந்த நடவடிக்கையில் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகள் ஈடுபட உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த நடவடிக்கையில் பயணிகளைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் விரைவு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பரிசோதிக்கப்படும். மேலும் நெடுஞ்சாலைகள், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
சாலை விபத்துகளுக்குக் காரணமாக அடையாளம் காணப்பட்ட ஒன்பது முக்கிய குற்றச்செயல்களுக்கு JPJ அதிக கவனம் செலுத்தும்.
“அவற்றில் வேக வரம்பை மீறுதல், சிவப்பு விளக்கை மீறுதல், இரட்டை கோட்டில் முந்திச் செல்வது, அவசர பாதையைப் பயன்படுத்துதல், சீட் பெல்ட் அல்லது தலைக்கவசம் அணியாமல் இருப்பது, வரிசையை மீறி செல்லுதல், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துதல், அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வது, ஆபத்தான முறையில் சரக்குகளை ஏற்றிச் செல்வது ஆகியவை அடங்கும்.
“இதற்கு மேலாக, JPJ பேருந்து நிலையங்களில் திடீர் சோதனைகளையும் நடத்தப்படும். மேலும் பேருந்துகளுக்குள் மறைமுக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஓட்டுநர்கள் சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடைபெறும் 288 “ஹாட்ஸ்பாட்” இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்கள் நடவடிக்கை காலத்தில் JPJ அதிகாரிகளால் முறையான கண்காணிப்பில் இருக்கும்.
இதற்கிடையில், மார்ச் 18 முதல் பொதுமக்களுக்காக JPJ புதிய வசதியையும் அறிமுகப்படுத்துகிறது. AWAS அபராதத்தால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் MyJPJ செயலி மூலம் அபராதத்தைச் செலுத்தலாம் என்றார் அவர்.
அந்தச் செயலி வழியாக அபராதத்தைச் செலுத்தியதும் கருப்புப் பட்டியல் நிலை தானாகவே நீக்கப்படும்.
இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அபராதங்கள் அல்லது விசாரணை அறிவிப்புகளுக்கு இந்த வசதி பொருந்தாது என்றார் அவர்.
இதனுடன், பண்டிகை காலத்தில் அனைத்து சாலைப் பயனாளர்களும் பொறுப்புடன் வாகனம் ஓட்டி போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
