செய்திகள் மலேசியா
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
குவாந்தான்:
பஹாங் மாநிலத்தில் நோன்புப் பெருநாள் - அய்டில்ஃபித்ரி தொழுகை நாள் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு ஆவணத்தைப் பஹாங் மாநில முப்தி துறை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
அந்த ஆவணம் போலியானது என்றும் அது பஹாங் மாநில முப்தி துறையால் வெளியிடப்பட்டதல்ல என்றும் சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், சரியான தகவல்களைப் பெற பஹாங் மாநில முப்தி துறை அல்லது அந்த மாநிலத்தின் மத அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“இந்தப் போலி ஆவணத்தின் பரவல் தொடர்ந்து நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்கான வாய்ப்பையும் பஹாங் மாநில முப்தி துறை நிராகரிக்கவில்லை.
“போலி செய்திகளைத் தடுக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது,” என்று அந்தத் துறை இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, மார்ச் 20 அன்று காலை 8.45 மணிக்கு பஹாங் மாநிலத்தில் அய்டில்ஃபித்ரி தொழுகை நடைபெறும் எனக் கூறி ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
