செய்திகள் மலேசியா
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
கோலாலம்பூர்:
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க (AS) முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும் என்று முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்தார்.
அதிகப்படியான உற்பத்தி திறன் குறித்த குற்றச்சாட்டுகள், மலேசியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களைக் கொட்டுகிறது என்று அர்த்தமில்லை என்று அவர் தெரிவித்தார்.
“மலேசியாவுக்கு அதிக உற்பத்தித் திறன் இருந்தாலும், அதனால் நாங்கள் அமெரிக்க சந்தைக்கு அனுப்பும் பொருட்களை டம்பிங் செய்கிறோம் என்பதில்லை.
“அதிக உற்பத்தித் திறன் இருந்தாலும், நாங்கள் டம்பிங் செய்யவில்லை என்றால் எங்கள் செலவுகளை நிரூபிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க, 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301(b) கீழ், உற்பத்தித் துறையில் கட்டமைப்பு சார்ந்த அதிக உற்பத்தித் திறன், உற்பத்தி தொடர்பாக மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) உட்பட 15 நாடுகளின் நடவடிக்கைகள், கொள்கைகள், நடைமுறைகள் குறித்து விசாரணை தொடங்கியதைப் பற்றி அவர் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர், புதன்கிழமை வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில், அந்த நடவடிக்கைகள், கொள்கைகள், நடைமுறைகள் நியாயமற்றதா அல்லது பாகுபாடானதா, மேலும் அவை அமெரிக்க வர்த்தகத்தைச் சுமையாக்குகிறதா அல்லது கட்டுப்படுத்துகிறதா என்பதை இந்த விசாரணை தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.
இந்த விசாரணைக்கு உட்பட்ட நாடுகளில் சீனா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நோர்வே, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென் கொரியா, வியட்நாம், தைவான், வங்காளதேசம், மெக்சிகோ, ஜப்பான், இந்தியா ஆகியவை அடங்குகின்றன.
இதற்கு முன்பு ஜொஹாரி, நேற்று இரவு கம்போங் பாருவில் உள்ள After 6 Coffee வளாகத்தில் நடைபெற்ற ‘Moreh dengan Yang Berhormat’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மலேசிய பண்டில் வியாபாரிகள் சங்கமும் திதிவாங்சா பகுதி இளைஞர் கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
திதிவாங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான ஜொஹாரி, உள்ளூர் சந்தை விலை, ஏற்றுமதி விலையை ஒப்பிட்டு இந்த விஷயத்தை விளக்க முடியும் என்று தெரிவித்தார்.
“மலேசியாவில் விற்கப்படும் விலையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலையும் ஒப்பிடலாம்.
“நாம் இங்கே விற்கும் விலையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விலையும் ஒரே மாதிரியாக இருந்தால், நாம் டம்பிங் செய்கிறோம் என்று கூற முடியாது,” என்றார் அவர்.
ஒரு பொருள் அதன் சொந்த நாட்டில் விற்கப்படும் விலையை விட வெளிநாட்டு சந்தையில் குறைந்த விலையில் விற்கப்பட்டால் அது பொதுவாக டம்பிங் எனக் கருதப்படும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து ஜொஹாரி கூறுகையில், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் சுரண்டல் நடைபெறாமல் இருக்கவும் மலேசியாவில் தொழிலாளர் சட்டங்கள் உள்ளன.
“சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் தொழிலாளர்களைப் பயன்படுத்துதல் அல்லது குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக சம்பளம் வழங்குதல் போன்றவை கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளில் அடங்கும்,” என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், குறைந்த வயதுடையவர்களை வேலைக்கு அமர்த்துவதும் நாட்டின் சட்டங்களின்படி அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு குறைவாக நிறுவனங்கள் சம்பளம் வழங்கினால் அது அனுமதிக்கப்படாது. அதேபோல் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதும் சட்டவிரோதம்,” என்றார் அவர்.
சர்வதேச வர்த்தகத்தில் மலேசிய பொருட்கள் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தப்படாமல் இருக்க தொழிலாளர் சட்டங்களையும் வேலைவாய்ப்பு தரநிலைகளையும் கடைபிடிப்பது மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
