செய்திகள் மலேசியா
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
பெட்டாலிங் ஜெயா:
50 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர், மார்புப் பகுதியில் குத்துக் காயம் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், இங்கு உள்ள ஒரு கடைக்குடியிருப்பில் நேற்று சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.20 மணியளவில் போலிசார் தகவல் பெற்றனர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாம்சுதின் மாமட் தெரிவித்தார்.
ஒரு ஆண் அந்த இடத்தில் சென்றபோது, உள்ளூர் ஆண் ஒருவர் தரையில் இரத்தம் சிந்திய நிலையில் உணர்விழந்தபடி கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.
“ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், 50 வயதுடைய அந்த உள்ளூர் ஆண் மார்புப் பகுதியில் ஏற்பட்ட குத்துக் காயத்தால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
“உண்மையான காரணத்தைக் கண்டறிய இன்று உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
“இந்தச் சம்பவம் குறித்து தகவல் உள்ள பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையக (IPD) கட்டுப்பாட்டு அறை 03-79662222 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
