செய்திகள் மலேசியா
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
செந்தோசா:
இந்து ஆலயம் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல், ஈடுபாட்டு அமர்வை நடத்த விருப்பம் தெரிவித்ததற்காக பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி புத்ராஜெயாவில் பிரதமரின் அரசியல் செயலாளர் சான் மிங் காய் உடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.
நடைமுறை, இணக்கமான தீர்வுகளைத் தேடுவதோடு, இந்து சமூகத்தின் கருத்துகள், கவலைகளைக் கேட்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படைத்தன்மையை பிரதிபலித்தது.
இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் நேரடியாக ஈடுபடுவதற்கான அவர்களின் கவனத்திற்கும் விருப்பத்திற்கும் பிரதமருக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றி.
இதுபோன்ற நடைமுறைகள், ஈடுபாடுகள் மூலமாகவும், தேசிய இந்து கோவில்கள் வழிகாட்டுதல் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாகவும்,
பல ஆண்டுகளாக நடந்து வரும் கோயில் நிலப் பிரச்சினையை அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் ஒழுங்கான, நியாயமான முறையில் தீர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
கோயில் நிலப் பிரச்சினையை ஒழுங்கான, உள்ளடக்கிய முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் முன்மொழிவுகளை தீவிரமாகக் கருத்தில் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
