நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கைபூலோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

தொடர் கனமழையைத் தொடர்ந்து சுங்கைபூலோ கம்போங் பாயா ஜெராஸ், கம்போங் குபு காஜா உட்பட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இம்மையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும்.

அதே வேளையில் இம்மக்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து அரசு துறைகளுடன் இணைந்து செயல்படவும் எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குறிப்பாக பாதிக்கப்ப்பட்ட மக்களின் நலனில் முழு அக்கறை செலுத்தப்படும்.

மேலும் சுங்கைப்பூலோவி வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சினையை களைவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாயா ஜெராஸ் வெள்ள நிவாரண மையங்களில் மக்களை சந்தித்த டத்தோ ரமணன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset