நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள்  கண்டறியப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள்  கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

தனிமைப்படுத்தப்படும் மையங்கள் குறித்து புகாஸ் எனப்படும் மதங்களுக்கு எதிரான ஆய்வு மையத்தின் முகநூல் கணக்கு மூலம் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

புகாஸ் வெளிப்படுத்திய தகவல்கள் பற்றிய விசாரணையின் முடிவுகள் மலேசியாவில் 10 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன.

மற்ற இரண்டு மையங்கள் வெளிநாட்டில் இந்தோனேசியா, துருக்கியில் உள்ளன.

மேலும் விசாரணையில் செப்டம்பர் 21 அன்று மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

மேலும் ஏழு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் செயல்படாதவை எனக் கண்டறியப்பட்டது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset