நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கில் நஜீப் விடுதலை செய்யப்படுவாரா?: அக்டோபர் 30ஆம் தேதி முடிவு 

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கில் நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள அழைக்கப்படுவாரா அல்லது விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்விக்கான முடிவு அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்ப்படும்.

உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ் செக்வேரா இதனை தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 19 முதல் 12 நாட்களுக்கு அரசுத் தரப்பு, நஜீப் தரப்பு வாதங்களை நீதிபதி செவிமடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா அல்லது,

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்று முடிவு வரும் அக்டோபர் 30ஆம் தேதி  அறிவிக்கப்படும்.

மேலும் இரு தரப்பினரின் ஆழமான வாதங்களுக்கும் நல்ல ஆராய்ச்சிக்கும் நன்றி  என நீதிபதி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset