நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெள்ளி கோள் ஆய்வு விண்கலம் 2028-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

டெல்லி:

வளிமண்டலம் மற்றும் புவியியல் ஆய்வுக்கான இந்தியாவின் வீனஸ் திட்டம் வருகின்ற 2028-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகங்களுக்கு இடையேயான பணி என்பதால், இஸ்ரோவின் அதிக எடையை தாங்கி செல்லும் எல்.வி.எம்-3 ரகத்திலான பாகுபலி ராக்கெட்டைப் பயன்படுத்தப்பட உள்ளது.

ஏவப்பட்ட 4 மாதங்களுக்குப் பிறகு, 112 நாட்கள் பயணத்திற்கு பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி சுற்றுப்பாதை வழியாக வெள்ளிக்கோளை சுக்ரயான்-1 விண்கலம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டரிலும் அதிகப்பட்சம் 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலை நிறுத்தும்.

ரூ.1,236 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், ரூ.824 கோடி விண்கலத்தை உருவாக்குவதற்காகச் செலவிடப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset