
செய்திகள் மலேசியா
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டத்தில் சலசலப்பு; இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம்
செலாயாங்:
நேற்றிரவு பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதியில் அடிப்படை வசதிகளை கொண்டு வர, குறிப்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக 32 வீடுகள் உடைபடும் சூழல் எதிர்நோக்கியிருப்பதால் அது தொடர்பான கூட்டம் நேற்றிரவு நடந்தது.
அடிப்படை வசதிகளைக் கொண்டு வருவதற்கான கருத்து கேட்கும் கூட்டமும் அதனுடன் செய்தியாளர்கள் சந்திப்பும் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் கூச்சல் குழப்பம் எழுப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கினர்
இதனால், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது. இரு தரப்பு நபர்களும் தங்களுக்கான வாதங்களை முன்வைத்தனர்.
பிறகு, எந்தவொரு தீர்வும் இல்லாமல் இந்த கூட்டம் நிறைவு பெற்றது. நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று நடந்த கூட்டமானது மூன்றாம் தரப்பினரால் திசைதிருப்பப்பட்டு வேண்டுமேன்றே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த வீ.எஸ். ராமன் குற்றஞ்சாட்டினார்
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:34 pm
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm