நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம், போலிசாரின் ஆலோசணைக்கு இணங்க ஜம்ரியுடான விவாதம் தொடராது என அறிவித்தேன்; பயத்தால் அல்ல: டத்தோஶ்ரீ சரவணன்

தாப்பா:

அரசாங்கம், போலிசாரின் ஆலோசணைக்கு இணங்க ஜம்ரி வினோத்துடனான விவாதம் தொடராது என அறிவித்தேன்.

மாறாக பயத்தால் அல்ல என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை தெரிவித்தார்.

இந்துக்கள் பக்தியுடன் காவடியேந்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வதையும் வேல் வேல் என்று கூறுவதையும் ஜம்ரி வினோத் மிகவும் இழிவாக பேசியிருந்தார்.

அவரின் கூற்றில் எந்தவொரு உண்மையும் இல்லை என்பதை அவருக்கு தெளிய வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாக இருந்தது.

இதன் அடிப்படையில் தான் பொது விவாதத்திற்கு வர சொல்லி அவருக்கு சவால் விடுத்தேன்.  மேலும் இந்த விவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல.

இந்நிலையில் அரசாங்கம், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர், போலிசார் ஆலோசனைக்கு இணங்க விவாதம் தொடராது என அறிவித்தேன்.

இந்த விவகாரத்தில் யாரை கண்டும் நான் பயப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர், மஇகாவின் துணைத் தலைவர் என்ற முறையில் எனக்கும் பொறுப்புகள் கடமைகள் உள்ளது.

அதே வேளையில் இந்து மதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக எனது எதிர்ப்பும் போராட்டமும் ஒரு போதும் ஓயாது.

தாப்பாவில் நடைபெற்ற பள்ளிவாசல், சூராவ்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் டத்தோஶ்ரீ சரவணன் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset