நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்

கோலாலம்பூர்:

2025 மே மாதம் 9,10,11 தேதிகளில் திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு நடைபெற இருக்கின்றது.

இம்மாநாடு தமிழ்நாட்டில் இயங்கி வரும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாடாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மலேசியாவில் நடத்திய ஏற்பாட்டுக்கு குழுவின் தலைவரான டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அவர்களுக்கு தமிழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அழைப்பு வந்துள்ளது.

இந்த அழைப்பிற்கு எவ்வாறான மறுமொழி கொடுத்து, அழைப்பை ஏற்றுக் கொண்டு மலேசியாவிலிருந்து பேராளர்களை ஒருமுகப்படுத்தி ஒருமித்த மலேசிய குழுவாக செல்வதற்கான ஏற்பாடு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

அக்குழு தமிழ் இலக்கிய பற்றுதல் கொண்டவர்களும், தேசிய இயக்க தலைவர்களும் அடங்கும்.

பெர்மிம் தலைவர் ஷேக் ஃபரிதுதீன், கெப்பிமா முன்னாள் தலைவர் முகம்மது, சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் டத்தோ எம்.இசட். கனி, டத்தோ ஹாஜி காசிம் அலியா, மாவார் முன்னாள் தலைவர் ஹாஜி பஷீர் அஹமது, போன்றவர்கள் உறுப்பினர்களாக அமைக்கப்பட்டுள்ளன.

மாநாடு வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து அம்மாநாட்டில் மலேசிய பிரதிநிதிக்கும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா சார்பாக முக்கியமான சில பரிந்துரைகளை இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்கு வழங்கபட்டுள்ளது. அதன் முடிவுகளை பின்னர் அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset