
செய்திகள் மலேசியா
ஹஜ் காலியிடங்களை நிரப்ப 84,000 மேல்முறையீடு விண்ணப்பங்களை தாபோங் ஹாஜி பெற்றுள்ளது: நயிம் மொக்தார்
புத்ராஜெயா:
இந்த ஆண்டு ஹஜ் செய்ய முடியாத யாத்ரீகர்களுக்கான காலியிடங்களை நிரப்ப தாபோங் ஹாஜி வாரியத்திற்கு 84,000 மேல்முறையீடு விண்ணப்பங்கள் வந்துள்ளது.
பிரதமர் துறையின் மத விவகாரங்கள் அமைச்சர் டத்தோ முகமட் நயிம் மொக்தார் இதனை தெரிவித்தார்.
மொத்த விண்ணப்பதாரர்களில் 80,000க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணத்திற்கான முழு செலவையும் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தகுதியுள்ள 31,600 ஹஜ் யாத்ரீகர்களில் 91 சதவீதம் பேர் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையை நிறைவேற்றுவதாக உறுதி செய்துள்ளனர்.
மீதமுள்ள ஒன்பது சதவீதம் மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்தவர்களால் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிலவரப்படி 91 சதவீத யாத்ரீகர்கள் தாப்போங் ஹாஜிக்கு ஏற்பு கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்,
மேலும் அவர்கள் அனைவருக்கும் அந்தந்த விமான பயண தேதிகள் கிடைத்துள்ளன.
சவுதி அரேபிய அரசாங்கம் மலேசியாவிற்கு கூடுதலாக 10,000 ஒதுக்கீட்டை அனுமதிக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.
ரமலான் ரஹ்மா மடானியின் மருத்துவ மையங்கள், மருத்துவமனைகளுக்கான நன்கொடை விழாவிற்கு அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:34 pm
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm