
செய்திகள் மலேசியா
தாப்பாவில் 19 பள்ளிவாசல்கள், 91 சூராவ்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு: டத்தோஶ்ரீ சரவணன் வழங்கினார்
தாப்பா:
தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 19 பள்ளிவாசல்கள், 91 சூராவ்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று வழங்கினார்.
இன்று தாப்பாவில் அம்னோ கட்டடத்தில் நடைபெற்ற பள்ளிவாசல், சூராவ்களின் பொறுப்பாளர்களை சந்தித்தப் பின்னர் இந்த அன்பளிப்புகளை அவர் எடுத்து வழங்கினார் .
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு அன்பளிப்புகள் வழங்குவதாக யாரும் கருதக் கூடாது.
ஒவ்வொரு பெருநாள் காலங்களில் இந்த அன்பளிப்புகளை தாம் வழங்கி வருவதாக மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
தப்பா நாடாளுமன்றத்தில் உள்ள ஆயர் கூனிங் சட்டமன்றத் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி தமது வெற்றியை நிலை நாட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தேர்தலில் தாப்பாவில் பிரதான சாலை வழிகளை மாற்றி அமைக்கப்பட்டதால் அங்கு வர்த்தகம் செய்து வரும் வணிகர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருவது சமீப காலமாக சர்சையாக உள்ளது.
இந்த விவகாரத்திற்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் டத்தோஶ்ரீ சரவணன் விளக்கம் அளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:34 pm
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm