
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை
கோலாலம்பூர்:
அடுத்த மாதம், ஏப்ரல் 1-ஆம் முதல் கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும் என்று கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முஹம்மத் ஷெரீப் தெரிவித்தார்.
பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852)- க்கு இணங்க அனைத்து வணிகர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சிகரெட்டுகள் மற்றும் மற்ற புகைபிடிக்கும் பொருட்கள் மூடிய அலமாரிகளில் பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
சில்லறை விற்பனைக் கடைகளில் புகையிலை மற்றும் வேப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டது.
தடையை மீறும் தனிநபர்களுக்கு RM500 முதல் RM30,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதே நேரத்தில் கடையின் உரிமையாளருக்கு RM300,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
சில சிறப்பு கடைகள் புகைபிடிக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால் புகைப்பிடிப்பது தொடர்பான எச்சரிக்கை பதாகையை முக்கியமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:34 pm
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm