
செய்திகள் மலேசியா
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 –
தம்மை தொடர்புடைய ஊழல் மற்றும் பணச்சலவை வழக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நடத்தும் விசாரணைக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், உறுதியளித்துள்ளார்.
புத்ராஜாயா எம்ஏசிசி தலைமையகத்தில் இன்று பல மணி நேரம் விளக்கம் அளித்த பிறகு, “விசாரணை முடியும் வரை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
- தயாளன் சண்முகம்
அதேசமயம், எம்ஏசிசி வட்டாரங்கள், பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், நாளை (மார்ச் 14) காலை மீண்டும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தன.
முன்னாள் அதிகாரிகள் தொடர்பான வழக்கு
இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் நான்கு மூத்த அதிகாரிகள் தொடர்பான வழக்கில் அவர் (இஸ்மாயில் சப்ரி) சந்தேக நபராக அழைக்கப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி கூறியிருந்தார்.
மொத்தம் RM170 மில்லியன் ரொக்கம் மற்றும் 16 கிலோ தங்கக்கட்டிகள் — சுமார் RM6.7 மில்லியன் மதிப்புள்ளவை — இந்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் மூன்று “பாதுகாப்பு இல்லங்கள்” என கருதப்படும் இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாக எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm