நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி

கோலாலம்பூர்:

அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி மூலம் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக அருண் துரைசாமி மீது விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

பினாங்கு பத்து கவானில்  இது தொடர்பான புகாரை போலிசார் பெற்றனர்.

அருணின் அறிக்கையைக் காட்டும் ஒரு காணொளி வாட்ஸ்அப் செயலியில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான தூண்டுதல்களைக் கொண்டுள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் போலிஸ்படையையும் பிரதமரையும் தொட்டதாக அவர் கூறினார்.

ஜம்ரி வினோத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் தானும் மலேசிய இந்து மத சங்கமும், இந்து சமூகத்தினரும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(சி), தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் போலிஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் விவரக் குறிப்புகளை வைத்து அடையாளம் காணப்படும் விசாரணைகள் நடந்து வருவதாக டான்ஶ்ரீ ரஸாருடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset