நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி பிறப்புச் சான்றிதழ்  கும்பலுக்கு குழந்தை கடத்தலுடன் தொடர்பிருக்கலாம்: சைபுடின்

புத்ராஜெயா:

போலி பிறப்புச் சான்றிதழ் கும்பலுக்கு குழந்தை கடத்தலுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

பிறப்பு ஆவண மோசடி கும்பலில் டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட ஒரு மருத்துவரையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.

இது வெளிநாட்டிலிருந்து குழந்தை கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனையிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் போன்ற போலி ஆவணங்களைத் தயாரிக்க உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மோசடி கும்பல் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

தேசிய பதிவிலாகாவிடம் செல்லுபடியாகும் பிறப்புச் சான்றிதழைப் பெற இந்த மோசடி கும்பலின் ஆவணம் பயன்படுத்தப்பட்டதும். பின்னர் அடையாள அட்டை இல்லாத குழந்தைகளுக்கு குடியுரிமை அந்தஸ்தை வழங்குவதற்காக கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த கும்பல் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அவர்களிடம் தனிப்பட்ட ஆவணங்கள் இல்லை, மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு விற்கப்படுகிறார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset