நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்

புத்ராஜாயா, மார்ச் 13 –

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தலைமையகத்தில் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியேறினார்.

ஊழல் மற்றும் பணச்சலவை தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், இஸ்மாயில் சப்ரியிடம் இன்று பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், நாளை (மார்ச் 14) காலை 9.00 மணிக்கு மீண்டும் விளக்கம் தர வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக MACC வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

“அவரின் உடல்நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று MACC வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தமது முன்னாள் நான்கு மூத்த அதிகாரிகள் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக இஸ்மாயில் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, RM170 மில்லியன் ரொக்கம் மற்றும் 16 கிலோ தங்கக்கட்டிகள் (மில்லியன் மதிப்பில்) மீட்கப்பட்டதாக MACC அறிவித்தது. இவை, நான்கு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் மூன்று “பாதுகாப்பு இல்லங்களில்” நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டன.

நாளையும் தொடரும் விசாரணை

முதலில் மார்ச் 5-ஆம் தேதிக்காக அழைக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரி, மருத்துவச் சான்றிதழ் வழங்கி மார்ச் 7-க்கு தேர்த்தை மாற்றினார். மார்ச் 7-ஆம் தேதியும் அவர் மீண்டும் மருத்துவச் சான்றிதழ் வழங்கியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, MACC அதிகாரிகள் இஸ்மாயில் சப்ரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை நேரில் சந்தித்து, அவரது உடல்நிலை, தொடர்ச்சியான சான்றிதழுக்கு தகுந்ததா என்பதை உறுதிப்படுத்த முயன்றனர்.

இஸ்மாயில் சப்ரி, நாளை மீண்டும் MACC தலைமையகத்திற்கு வருவார் என வட்டாரங்கள் தெரிவித்தன.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset