
செய்திகள் மலேசியா
பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான நிலுவை தொகையை வழங்கவே சபுராவுக்கு 1.1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது; பிணை எடுப்பதற்கு அல்ல: பிரதமர்
புத்ராஜெயா:
பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கான நிலுவை தொகையை வழங்கவே சபுராவு எனர்ஜிக்கு 1 .1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.
மாறாக அதன் நிர்வாகிகளை பிணை எடுப்பதற்கு அத்தொகை வழங்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சபுரா எனர்ஜியில் 1.1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்ட நடவடிக்கையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இது சிக்கலில் உள்ள எண்ணெய், எரிவாயு நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளைக் காப்பாற்றுவதற்கும் பிணையில் எடுப்பதற்கும் இத்தொகை வழங்கப்படவில்லை.
பெரும்பாலும் பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைச் செலுத்துவதற்காக இது வழங்கப்பட்டது.
மலேசியா டெவலப்மென்ட் ஹோல்டிங் வாயிலாக பொது பட்டியலிடப்பட்ட சபுராவிற்கு இந்நிதி செலுத்தப்பட்டது.
சப்புராவிற்கு பணத்தை அனுப்புவது எளிதான முடிவு அல்ல. ஆனால் எண்ணெய், எரிவாயு விநியோகச் சங்கிலியில் நிதி சிக்கலை தடுக்க இது அவசியமாக இருந்தது.
சப்புராவின் மீட்டுக்கொள்ளக்கூடிய மாற்றத்தக்க கடன் பங்குகளில் மலேசியா டெவலப்மென்ட் ஹோல்டிங்சின் சந்தா மூலம் இந்த நிதி வழங்கப்பட்டது.
இந்தப் பணம் அப்படியே எரிக்கப்படாது. இந்த நிதி புதிய நிர்வாகத்திற்கான மூலதனக் கடனாகக் கருதப்படுகிறது.
இது நிறுவனத்தை சிறப்பாக நிர்வகித்து லாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையுடன், பின்னர் இந்த நிதியை திருப்பிச் செலுத்த முடியும்.
இவ்விவகாரத்தை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம். காரணம் நல்ல நோக்கத்துடன் இத்தொகை வழங்கப்பட்டது.
மாறாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகளை பிணையில் எடுப்பதற்கு அல்ல என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 4:48 pm
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்: ஐஜிபி
March 13, 2025, 4:46 pm
திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9 ஆம் மாநாடு: மலேசியப் பேராளர்கள் பங்கேற்பார்கள்
March 13, 2025, 4:34 pm
எம்ஏசிசி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்: இஸ்மாயில் சப்ரி
March 13, 2025, 4:18 pm
எம்ஏசிசி விசாரணைக்கு பிறகு இஸ்மாயில் சப்ரி வெளியேறினார் – நாளையும் விசாரணை தொடரும்
March 13, 2025, 4:02 pm