செய்திகள் இந்தியா
சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்
சென்னை:
சிங்கப்பூர், லண்டன் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர்.
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்வது வழக்கம் ஆகும்.
இந்த நிலையில், லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
லண்டனில் இருந்து வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் விமானம் தாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, 317 பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.
அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்தது.
இதனால், சென்னையில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 188 பயணிகளும் அந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 7:19 pm
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
February 2, 2025, 4:14 pm
7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு
February 1, 2025, 9:05 am
சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி
February 1, 2025, 8:59 am
தில்லி தேர்தலைக் கலக்கும் யமுனை மாசு
January 30, 2025, 3:02 pm
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
January 30, 2025, 2:59 pm
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
January 29, 2025, 10:54 pm
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
January 29, 2025, 3:12 pm
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
January 28, 2025, 5:08 pm