செய்திகள் இந்தியா
தில்லி தேர்தலைக் கலக்கும் யமுனை மாசு
புது டெல்லி:
இந்தியாவில் வற்றாத ஜீவ நதியாக உள்ள யமுனை ஆற்றில் கலந்துள்ள நச்சு மாசு தில்லி தேர்தல் பரப்புரையை கலக்கி வருகிறது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தில்லிக்கு பாஜக ஆளும் ஹரியாணா வழியாக வரும் யமுனை ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் அமோனிய நச்சு அளவு அதிகமாக உள்ளதால் அதை தில்லி வாசிகள் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இது பிப்ரவரி மாதம் நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தல் பரப்புரையில் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
தில்லி மக்களுக்காக ஹரியாணா மக்கள் விஷத்தை குடிநீரில் கலப்பார்களா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
இரு மாநில மக்களிடம் மோதலை ஏற்படுத்த கெஜ்ரிவால் முயல்கிறார் என மோடி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ஆற்றில் ஹரியானா பாஜக அரசு விஷம் கலந்ததாக கூறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அழித்துவிட்டார். பணி ஓய்வுக்கு பிறகு அவர் பதவி எதிர்பார்க்கிறார். ராஜீவ் குமார் போன்று வேறு யாரும் தேர்தல் ஆணையத்தை இவ்வளவு சேதப்படுத்தவில்லை. அவர் விரும்பினால் டெல்லி தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம். நான் உயிருடன் இருக்கும் வரை டெல்லி மக்களை விஷத் தண்ணீரை குடிக்க விடமாட்டேன். 2 நாட்களில் அவர்கள் என்னை கைது செய்வார்கள் என்று எனக்குத் தெரியும். இதற்கு நான் பயப்படமாட்டேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 7:19 pm
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
February 2, 2025, 4:14 pm
7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு
February 1, 2025, 9:05 am
சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி
January 30, 2025, 3:02 pm
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
January 30, 2025, 2:59 pm
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
January 29, 2025, 10:54 pm
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
January 29, 2025, 3:12 pm
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
January 28, 2025, 5:08 pm