
செய்திகள் இந்தியா
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புது டெல்லி:
கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
விஜய் கிஷோர் கோஸ்வாமி தாக்கல் செய்த பொது நல மனுவில், விஐபி தரிசனத்துக்கு கோயில்களில் ரூ.400, ரூ.500 என சிறப்பு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை, அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பக்தர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடாகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டும் முழுமையான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. எனவே, கோயில்களில் விரைவான தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விஐபி தரிசன நடைமுறையை ரத்து செய்ய உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. அப்போது, கோயில்களில் சிறப்பு சலுகை வழங்க கூடாது என்ற கருத்தை நாங்கள் கொண்டிருந்தாலும் கூட, இந்த நீதிமன்றத்தால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது.
அதிகார வரம்பை பயன்படுத்த பொருத்தமான வழக்கு எண்ணவில்லை. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் கோயில் நிர்வாகங்களும் சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm