
செய்திகள் இந்தியா
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
புது டெல்லி:
வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவரை உறுப்பினர்களாக சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான தனது அறிக்கையை ஜேபிசி முறைப்படி ஏற்றுக்கொண்டது. மசோதாவின் திருத்தப்பட்ட வடிவத்தை 15-11 வாக்குகள் அடிப்படையில் ஜெகதாம்பிகா பால் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், பல்வேறு திருத்தங்களை குழு ஏற்றுக்கொண்டுள்ளது. பாஸ்மந்தா முஸ்லிம்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நபர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் புதிதாக வக்பு பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஜேபிசி செயல்பாடு குறித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதா வடிவானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
முஸ்லிம் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதன் மூலம் வக்பு வாரியம் வலிமை இழக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm