
செய்திகள் இந்தியா
டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் ஜன.20ல் பதவியேற்றார். இந்நிலையில் டிரம்புடன் பேசிய பிரதமர் மோடி தனது அன்புள்ள நண்பருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.
டிரம்ப் பதவியேற்ற உடனேயே பிறப்பு உரிமையால் குடியுரிமை கிடைக்காது என அறிவித்தார். இதனால் 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எச்1பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு, அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வ குடியேற்றம் செய்தவர்கள் தவிர மற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
இந்த சூழலில் டிரம்ப்-மோடி பேச்சு மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,’அன்பு நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். இந்தியா, அமெரிக்கா இடையே பரஸ்பர நன்மை, நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு, பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm