
செய்திகள் இந்தியா
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
பிரயாக்ராஜ்:
வட இந்தியாவில் இன்று (ஜன.29) மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இன்னும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமையன்று மாலை நிலவரப்படி 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று ஜன.29 ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm