நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு

புது டெல்லி: 

புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களவையில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை அறிவித்தார். 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அவர், மாத சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு கடந்த பட்ஜெட்டில் ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி மாத சம்பளம் பெறுவோர் ரூ.12.75 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்றார்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset