நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்

புது டெல்லி:

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததற்கு உத்தர பிரதேச அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மவுனி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் உ.பி. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

விஐபிகளுக்கு தனி பாஸ்கள் வழங்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சாதாரண மக்கள் கூட்டமாக தவிக்கவிடப்பட்டனர் என்றார்.

Deaths as stampede breaks out at India Hindu festival | SunOnline  International

சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மகா கும்பமேளாவில் உலகதரம் வாய்ந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு கூறியது பொய் என நிரூபணமாகி உள்ளது.

நிர்வாக குளறுபடிகளின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.

Stunning Drone Visual Shows Massive Crowd Of Devotees At Maha Kumbh Mela

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மகா கும்பமேளாவில் அரைகுறையான ஏற்பாடுகள், விஐபி-க்களுக்கு அதிக முக்கியத்துவம். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது கண்டிக்கத்தக்கது” என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset