நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலின் சக்திவாய்ந்த மொசாட் தலைமையகத்தை தாக்கிய ஈரான்

ஜெருசலம்:

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. 

இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 
இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மறைமுக உதவி செய்துவருவதாக தொடர்ந்து இஸ்ரேல் குற்றம் சாட்டிவந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் அரசு நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் லெபனான் மீது வான் வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. 

இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது  ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது.

இதில் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பாக கருதப்படும் மொசாட் தலைமையகத்தை குறி வைத்தும் ஈரானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்நிலையில், மொசாட், விமானப்படை தளங்களை குறி வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset