நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

மேற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காசா, மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், வன்முறைச் செயல்களில் இருந்து உலக சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் திட்டமிட்ட முயற்சியாகும்.

பதற்றத்தை அதிகரிப்பது, தற்போதைய இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வதையும், தண்டனையின்றி, ஒரு தனிநபரின் அரசியல் வாழ்க்கையின் நலனுக்காக அப்பாவி உயிர்களை தியாகம் செய்வதையும் தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகவே இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

அதே வேளையில் மேற்காசியா நாடுகள் வலுப்பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset