நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது.

ஜாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையின் இயக்குந டத்தோ முகமத் ஷாஜிஹான் அஹ்மத் இதனை கூறினார்.

சமய நம்பிக்கை, அனுமதியின்றி தொண்டு வசூல், திருமணம் உள்ளிட்ட பல்வேறு ஷரியா கிரிமினல் குற்றங்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உளவுத்துறை, ஜாய்ஸ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையின் குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

குறிப்பாக கைது நடவடிக்கைகளும் தொடரும்.

அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தியதன் விளைவாக, கட்டாயப்படுத்தப்பட்ட ஃபத்வாவிற்கு முரணான சந்தேக நபரின் நடைமுறைகளை ஜாய்ஸ்   கண்டறிந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset