நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்

புத்ரா ஜெயா:

வடகிழக்கு பருவமழை காலம் இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா தெரிவித்துள்ளது. 

அதற்கான காலப்பகுதியில், மலேசியாவில் நான்கு முதல் ஆறு வரையில் தொடர்ச்சியான கடுமையான மழை பொழியுமென கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் வியூகப் பிரிவின் துணை இயக்குநர் Ambun Dindang தெரிவித்துள்ளார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை சபா, சரவாக் மாநிலங்களில் கனமழைக்கு அதிகம் வாய்ப்புள்ளது என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

மேலும், வலுவான பருவமழை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்தால் மேற்கு கடற்கரை மாநிலங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset