நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

கோலாலம்பூர்:

நாட்டில் பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் நேற்று காலமானார்.

73 வயதுடைய டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் இயற்கை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

30 ஆண்டுகளாக இத்துறையில் அவர் ஈடுப்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட 12 இளங்கலை பட்டங்களை அவர் கொண்டிருக்கிறார்.

இயற்கை மருத்துவத்தின் வாயிலாக டிங்கி உட்பட பல நோய்களுக்கு தடுப்பு மருத்துகளையும் அவர் கண்டுப் பிடித்துள்ளார்.

மருத்துவத்தை தவிர்த்து சமூக சேவைகளிலும் அவர் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.

கலை, கலாச்சார, பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் பல நிகழ்வுகளையும் அவர் நடத்தியுள்ளார்.

அண்மைய காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

அவருக்கான இறுதி பிரார்த்தனைகளும் சடங்குகளும் இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset